9 வயதடைந்த சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.. அரசின் சர்ச்சை மசோதா : பெண்கள் போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2024, 2:10 pm

18 வயதடைந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று சட்டத்தில் இடம் இருந்த போதும் 9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.

தற்போது வரை ஈரானில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. ஆனால் தற்போது முமொழியப்பட்டுள்ள மசோதாவில் பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.

சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ள நிலையில், தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த மசோதவனுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 901

    0

    0