படிக்கும் மாணவனுக்கும், சமையல் செய்யும் குடும்பப் பெண்களுக்கும் இனி மாதம் ₹1000 : அமைச்சர் பெருமிதம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 ஆகஸ்ட் 2024, 3:56 மணி
Quick Share

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை இன்று கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இன்று தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தினை துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 75 கல்லூரிகளில் 5,112 மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்‌.

நிகழ்ச்சியில் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி : இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கக்கூடிய தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

உயர்கல்வி படிப்பதற்கு முதன்மையான மாவட்டமாக திண்டுக்கல் இருப்பதற்கு காரணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் என்றும் தற்போது தமிழக முதலமைச்சர் அவர்களால் படிப்பவர்களுக்கும், வீட்டில் சமையல் செய்யும் குடும்பப் பெண்களுக்கும் ரூ.1000 கிடைத்து வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரி முதன்முதலாக திண்டுக்கல்லுக்கு கொடுத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதியும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

முன்பு எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்களை வேலைக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால், தற்போது இலவசமாக உயர்கல்வி படிப்பதற்கு ஏற்பாடுகளை செய்தது திராவிட மாடல் அரசே என்றும் தற்பொழுது இந்த அரசு தாய், தந்தையாக இருந்து மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கி வருகிறது.

அனைவருக்கும் அழியாத செல்வமாக கல்வி செல்வம் உள்ளது. மாணவர்களுக்கு ரூ. 1000 மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் குடும்பப் பெண்களுக்கும் ரூ. 1000 மாதம் தோறும் வழங்கி வரும் திட்டமும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு உள்ளது” என தெரிவித்தார். முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பயன்பாட்டுக்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 16 புதிய நான்கு சக்கர வாகனங்களை கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 204

    0

    0