டார்கெட் பண்ணி அடிக்கிறாங்க.. அந்த படம் நல்ல படம் நடிகர் ரஞ்சித் ஓபன் டாக்..!

Author: Vignesh
9 August 2024, 6:53 pm

தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரஞ்சித். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

தற்போது, ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்து வருகிறார். என்னை மட்டும் டார்கெட் பண்ணி அடிக்கிறாங்க, எங்கிருந்து அடிக்கிறாங்க என்பதுதான் தெரியவில்லை. நான் நேர்மையாக இருக்கிறேன் நியாயமாக இருக்கிறேன் நான் தான் படம் எடுத்து இருக்கிறேன்.

எனக்கு என்று யாரும் இல்லை நான் மக்களை நம்பித்தான் படத்தை இயக்குகிறேன். என்னை எதிர்க்க நினைப்பவர்கள் முகத்தை காட்டாமல் முதுகில் குத்துகிறார்கள். நான் நல்ல படத்தை எடுத்திருக்கிறேன். நேர்மையான படத்தை எடுத்திருக்கிறேன். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ஆதரவை தர வேண்டும். நான் படத்திற்கு சாதி பெயரை வைக்கவில்லை.

கவுண்டம்பாளையம் என்பது ஒரு சட்டமன்ற தொகுதி, கொங்கு மண்டலத்தில் ஒவ்வொரு ஊருக்குள்ளும் கவுண்டம்பாளையம் என்று பெயர் இருக்கிறது. கவுண்டம்பாளையம், கவுண்டம்பட்டி இப்படி பல பெயர்கள் இருக்கிறது. இது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்தது. என்னைப் பற்றி ஏதாவது, வன்மத்தை பரப்பி மற்ற சமூகத்தினரிடமிருந்து என்னை புறக்கணிக்க வைத்த என்னை ஒரு சிறிய டப்பிக்குள் அடக்க நினைக்கிறார்கள். நான் நிறைய படம் நடித்திருக்கிறேன். மக்கள் என்னை பார்த்து இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும் என்று ரஞ்சித் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?