அரசு மருத்துவமனையில் டாக்டர் போல வேஷம் போட்டு நோயாளியிடம் இருந்து நூதன மோசடி.. ₹40,000 அபேஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2024, 6:52 pm

அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து டாக்டர் போல வேடமிட்டு நோயாளி உடன் இருப்பவரை ஏமாற்றி 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளைஞர்

சத்யசாய் மாவட்டம், புக்கப்பட்டினம் மண்டலம், நரசம்பள்ளி தாண்டாவைச் சேர்ந்த 25 வயதான பனாவத் சாய்குமார் நாயக் திருப்பதியில் தங்கி இருந்து பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷ்னில் பக்தர்கள் பயணிகள் ஏமாறும் நேரத்தில் செல்போன் மற்றும் பணத்தை திருடுவது வழக்கம்.

இந்நிலையில் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் அங்கிருந்த மருத்துவர் ஒருவர் நாற்காலியில் வைத்து சென்ற வெள்ளை கோர்ட், ஸ்டெதாஸ்கோப் அணிந்து கொண்டு டாக்டர் போல் தன்னை பாவித்து கொண்ட சாய்குமார் நாயக் அவசர வார்டில் டாக்டரை போல் வளம் வந்தான்.

இந்நிலையில் மதனப்பள்ளியைச் சேர்ந்த அசோக் என்பவர் தனது மகள் தீபிகாவை சிகிச்சைக்காக மூன்று தினங்கள் முன்பு இந்த மருத்துவமனைக்கு வந்த நிலையில் அவர்களிடம் சென்ற பனாவத் சாய்குமார் உங்கள் மகளுக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறி எழுதி கொடுத்து நீங்கள் ஸ்கேன் எடுக்கும் மையத்திற்கு செல்லும்படி கூறி உள்ளார். அப்போது அசோக்கிடம் ஆதார் கார்ட் ஜராக்ஸ் வேண்டும் என்று கூறி அவரது செல்போன் மற்றும் ஜராக்ஸ் எடுக்க ஜீபே நம்பர் பெற்று கொண்டான். அசோக் மகளுக்கு ஸ்கேன் எடுக்க தீபிகா அழைத்து சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் டாக்டர் வராததால் மீண்டும் வார்ட் அருகே சென்று டாக்டர் வேடத்தில் இருந்த சாய்குமார் காணாமல் போனதால் தான் ஏமாந்ததை உணர்ந்து மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வந்த நிலையில் அசோக் வங்கி கணக்கில் இருந்து ₹ 40 ஆயிரம் எடுக்கப்பட்டுருந்தது. இன்று அதிகாலை திருப்பதி கருடா சந்திப்பு அருகே சாய்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹ 35,000 பணம் செல்போன் பறிமுதல் செய்தனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 294

    0

    0