அப்பாவின் பிணத்தை பார்த்ததும்… நடிகை ரம்யா பாண்டியன் வேதனை!

Author:
10 August 2024, 1:44 pm

ஒரே ஒரு போட்டோ ஷூட் நடத்தி மிகப்பெரிய அளவில் ஒரே நைட்ல பேமஸ் ஆனவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய சேலையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்கள் வெளியிட அந்த புகைப்படம் ஒரே ஒரு நைட்டில் தீயாய் பரவி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது.

ramya pandian - updatenews360

அதன் மூலம் அவருக்கு மார்க்கெட் கிடைத்தது இவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகர் ஆன அருண்பாண்டியனின் அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனது தந்தை இறந்தபோது நடந்த மிக மோசமான அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டார் அப்போது என்னுடைய தந்தை இறந்துவிட்டார் என மருத்துவர் முதன் முதலில் என்னிடம் தான் வந்து கூறினார் .

அப்போது என்னால் நம்பவே முடியவில்லை… நான் உடனே உள்ளே சென்று அப்பாவை பார்த்தேன். அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும் கூட அதை என் மனதை ஏற்றுக் கொள்ளாமல் பல வருடங்கள் நான் தவித்து இருக்கிறேன். என்னுடைய அம்மாவும் அப்பா இறந்து விட்டார் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் கதறி அழுத்தார். என்னுடைய குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் கிட்டத்தட்ட 90 … 100 வயசை அசால்டா தாண்டுவாங்க. அப்படியிருக்கும்போது என்னுடைய அப்பா திடீரென மரணித்தது எங்களால் ஏற்றுக்க ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றார்.

  • samantha refused to act in sudha kongara movie சமந்தா என் படத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாங்க- சுதா கொங்கரா மனசுல இப்படி ஒரு சோகமா?