இருவரின் உயிரைக் குடித்த பார்பிகியூ: சிக்கனில் காத்திருந்த செக்: சோகமாய் முடிந்த ஜாலி டிரிப்…!!

Author: Sudha
10 August 2024, 3:24 pm

கொடைக்கானலில் சிக்கன் சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

சிக்கன் சமைத்த அடுப்பை அணைக்காததால் எழுந்த புகை காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த 4 இளைஞர்கள் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர் சமையலுக்கு தேவையான பொருட்களை திருச்சியில் இருந்து கொண்டு வந்து சமைத்துள்ளனர்.

சமைத்து விட்டு அடுப்பை அணைக்காமல் இருந்ததால் எழுந்த புகை காரணமாக மரணம் ஏற்பட்டதா? அல்லது சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழப்பா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தி அங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்