ஆற்றுப் பக்கம் போனால் ஆள் காலி.. கிராமமக்களை மிரட்டிய ராட்சத முதலை சிக்கியது.. நிம்மதியில் சிதம்பரம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2024, 6:58 pm

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர், பழைய நல்லூர், அகரநல்லூர், வல்லம்படுகை, வேலகுடி, வையூர், கண்டியாமேடு உள்ளிட்ட கிராம பகுதியில் ஒட்டி செல்கிறது பழைய கொள்ளிடம் ஆறு இந்த கொள்ளிடம் ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன

குறிப்பாக சில ஆண்டுகளாகவே பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க செல்லும் மனிதர்கள் மற்றும் இயற்கை உபாதை கழிக்க செல்லும் மனிதர்களை கடித்து இழுத்துச் சென்று கொன்று குவித்து வந்த நிலையில் காட்டுக்கூடலூர் கிராமத்தில் அவ்வப்போது கிராம மக்களை மிரட்டி வந்த சுமார் 400 கிலோ எடையும் 12 அடி நீளமும் கொண்ட முதலை இன்று காலை கரையில் படுத்திருந்தது.

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமை அதனை பார்த்து கூச்சல் இட்டுள்ளார், அப்போது ஒன்று திரண்ட கிராம மக்கள் கரையில் படுத்திருந்த முதலையை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் முதலையை மடக்கி பிடித்தனர்.

பின்னர் முதலையை கால்கள் மட்டும் வாயை கட்டி தோளில் தூக்கி சென்று டாட்டா ஏசி வாகனம் மூலம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

நீண்ட காலமாக பொதுமக்களை கொன்றும் மிரட்டி வந்த முதலியை பிடித்த சந்தோஷத்தில் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக முதலையை பிடிக்கும்போது வனத்துறையினர் முன்பாகவே சென்று இருக்க வேண்டும் வனத்துறையினர் வர காலதாமதம் ஆனதால் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பொதுமக்களே முதலையை பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!