பங்குச்சந்தையில் கிங்: ஹிண்டன்பர்க் ஈட்டும் 1000 கோடி:எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: அண்ணாமலை காட்டம்…!!

Author: Sudha
11 August 2024, 2:01 pm

.ஹிண்டன்பர்க் நிறுவனம் குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஹிண்டன்பர்க் ஒரு ஷார்ட் செல்லிங் ஏஜென்ட். முதலீட்டாளர்களை பீதியில் தள்ளும் வகையில் செய்தியை வெளியிட்டு பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது.

மேலும் ஒரு பங்கின் விலை இறங்குவதை முன்கூட்டியே கணித்து அதனை விற்று லாபம் பார்க்கிறது. உலகளவில் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நோக்கம்.

செபி தலைவர் குறித்து ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

செபி நோட்டீஸ் கொடுத்ததற்காக அந்த நிறுவனம் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறது. ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம் என பேசினார்.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 202

    0

    0