கோவை மக்களே உஷார்…. கனமழை குடையை எடுத்திட்டு வெளியே போங்க… வானிலை ஆய்வு மையம் விடுத்த அலர்ட்!!
Author: Sudha11 August 2024, 2:17 pm
தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மற்றும் கேரளாவிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலெர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் கேரளாவிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசான மழை முதல் கன மழை பெய்யக்கூடும் எனவும் 115 மிமீ முதல் 204.4 மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.