போதைப் பொருள் கடத்தல் பேர்வழி சிக்கியது எப்படி? இங்க விட்டு அங்க புடிச்ச கதை..!

Author: Vignesh
12 August 2024, 3:56 pm

கேரளாவில் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லும் வழியில் தப்பித்த இலங்கையை சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து வயதான மீனவரின் நாட்டு படகை திருடிக்கொண்டு இலங்கைக்கு தப்பித்து செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக கேரள கடற்படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது இலங்கையில் இருந்து படகில் அதிக போதை ஏற்படுத்த கூடிய ஹெராயின் வகை போதை பொருட்களை கடத்தி வரப்பட்ட 7 பேர் கொண்ட கும்பலை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், முக்கிய குற்றவாளியான இலங்கை கொழும்புவை சேர்ந்த அஜித் கிஷன் என்பவரை மற்றொரு வழக்கில் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் கடந்த 24 ம் தேதி வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றபோது செல்லும் வழியில் அஜித் கிஷன் தப்பி ஓடி உள்ளார்.

இதனையடுத்து, போலீசார் அவருக்கு லுக் அவுட் நோட்டிஸ் வழங்கி மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் கடந்த 8 ம் தேதி கடல் மார்க்கமாக தேங்காய் பட்டணம் துறைமுகத்திற்கு வந்த அஜித் கிஷன் அங்கு மீனவர்கள் மீன் பிடித்துவிட்டு ஆற்றின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டு படகை திருடி அருகில் நிறுத்தியிருந்த மற்ற படகுகளில் இருந்து மண்ணெண்ணைய் கேன்கள் உள்ளிட்டவற்றை திருடி எடுத்துக்கொண்டு தப்பித்து இலங்கை சென்றுள்ளார்.

அங்கே எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் அஜித் கிஷனை கைது செய்துள்ளனர் இந்த நிலையில் குமரி மாவட்டம் சின்னத்துறையை சேர்ந்த முதியவர் கார்லோஸ் என்பவர் தனது படகை காணவில்லை என நித்திரவிளை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இலங்கையில் அஜித் கிஷன் படகுடன் கைது செய்யப்பட்ட தகவல் வந்தது குமரி மாவட்ட மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 235

    0

    0