தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடுவார்களா?… அண்ணாமலைக்கு என்ன யோக்கியம் இருக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி?..

Author: Vignesh
12 August 2024, 4:39 pm

அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித்ஷாவாக இருக்கட்டும் அதிமுக 2 கோடி தொண்டர்களுக்கு அசைன்மென்ட் எடப்பாடியார் முதலமைச்சர் ஆக வேண்டும்

தமிழ்நாட்டிற்கு நிதி இல்லை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும் ஆகவே என் பதவியை ராஜினாமா செய்கிறேன் அண்ணாமலை சொல்லி இருந்தால் அவர் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கிறார்
வாய் கிழிய பேசினால் தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடுவார்களா? அதிமுகவை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன யோக்கியம் உள்ளது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு

அம்மாவைப் பற்றி நாலாந்தரமாக பேசிய தா.மோ.அன்பரசனுக்கு கண்டனம் தெரிவிக்காத மு க ஸ்டாலின் தமிழர் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிற ஒரு தலைவனாக இருப்பேரானல் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து தாமு அன்பரசனை நீக்க வேண்டும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கண்டன பேச்சு

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கழக ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர்களின் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒருங்கிணைந்த ஒன்றிய கழகத்தின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஓடைப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது இதில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கண்ணன் ராமையா பிரபுசங்கர் தலைமை தாங்கினார்

உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரையாற்றியதாவது

அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித்ஷாவாக இருக்கட்டும் ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2 கோடி தொண்டர்களுக்கு எங்கள் எடப்பாடியார் கொடுத்துள்ளார் அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டில் அம்மா ஆட்சியை மலர செய்ய வேண்டும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும் என்ற அசைமென்ட்

உங்கள் அசைன்மென்ட் என்னவாகும் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் ஆனால் அதிமுக தொண்டர்கள் இதயத்தில் சுமந்து கொண்டுள்ள அசைன்மென்ட் அது எட்டு கோடி தமிழர்களுக்கும் உள்ள அசைன்மென்ட் மீண்டும் அதிமுக ஆட்சிக்கட்டில் அமைகின்ற அசைன்மென்ட்

சத்துணவு திட்டத்தை கொடுத்த சரித்திர நாயகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்

கட்சியை தொடங்கியவர்கள் யார் வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சொல்வார்கள் அதைப்பற்றி கவலையில்லை செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சிக் கூட்டத்தில் அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது
வரலாறு தெரியாதவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள் உண்மையான அதிமுக தொண்டனின் நெஞ்சில் பாய்ந்ததை போல் உள்ளது செயல்வீரர் கூட்டத்தில் பேசும்போது உங்கள் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றால் கட்சி திட்டத்தைப் பற்றி பேசுங்கள் உண்மையான தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் மாநிலத் தலைவர் அண்ணாமலை என்ன செய்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது பீகார் ஆந்திராவிற்கு வாரி வழங்கப்பட்டுள்ளது கவலை இல்லை தமிழ்நாட்டிற்கு நிதி இல்லை ஆகவே பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும் ஆகவே என் பதவியை ராஜினாமா செய்கிறேன் அண்ணாமலை சொல்லி இருந்தால் அவர் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கிறார் என்று இந்த கூட்டத்தில் ஏற்றுக்கொள்கிறோம் வாய் கிழிய பேசினால் தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடுவார்களா அதிமுகவை பற்றி பேசுவதற்கு என்ன யோக்கியம் உள்ளது என்ன தகுதி உள்ளது எதற்காக நீங்கள் பேசுகிறீர்கள் இப்போது சொல்கிறேன் அண்ணாமலை அவர்களே மீண்டும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமையில் அதிமுக அரசு எட்டு கோடி தொண்டர்கள் ஆதரவோடு மலரும் அண்ணாமலை அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்

ஆளுகிற கட்சி திமுக இன்றைக்கு கள்ளச்சாராயம் மரணம் இறந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. அதிமுகவுடன் பயணித்தீர்கள் திடீரென வேறுபட்டு இருக்கிறீர்கள் இதைப் பற்றி யாரும் வருத்தப்படவில்லை அதிமுக என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல உங்களைப் போன்ற தலைவர்கள் அல்ல எடப்பாடியார் 50 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் இன்றைக்கு இயக்கத்தை எதிரிகளிடமிருந்து துரோகிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்து உழைத்தவர் இந்த அசைன்மென்ட் தமிழ்நாட்டிற்கு வேலை இல்லை ஒரே அசைன்மென்ட் அதிமுக ஆட்சிக்கட்டில் அமரும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்

தா.மோ.அன்பரசன் அமைச்சர் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் அம்மாவைப் பற்றிய பேசியதற்கு மு க ஸ்டாலின் எந்த கண்டனம் தெரிவிக்கவில்லை. அம்மாவைப் பற்றி நாலாந்தரமாக பேசிய தா.மோ.அன்பரசனுக்கு இன்னமும் கண்டனம் தெரிவிக்காமல் மு க ஸ்டாலின் அவர்களை உண்மையான சபை நாகரிகம் அரசியல் நாகரிகம் அரசியல் பண்பாட்டை தமிழர் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிற ஒரு தலைவனாக இருப்பேரானால் உடனடியாக அமைச்சர் பதவியில் தா.மோ. அன்பரசனை இருந்து நீக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் என சிறப்புரையாற்றினார்.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 276

    0

    0