பிரிட்டனில் இந்தியர்களுக்கு வேலை : இனி வாய்ப்பில்லை: விசாவை நிறுத்தி வைக்கிறதா பிரிட்டன் அரசு….?!

Author: Sudha
12 ஆகஸ்ட் 2024, 5:04 மணி
Quick Share

வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனில் பணிபுரிவோர் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகம் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

பிரிட்டன் பிரதமர் ஹேர் ஸ்டார்மர் , பிரிட்டன் உள்துறை அமைச்சகம் மற்றும் புலம் பெயர்வோருக்கான ஆலோசனை கமிட்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தகவல் தொழில் நுட்பம், தொலைதொடர்பு, இன்ஜினியரிங் துறையில் வெளிநாட்டவர்கள் பணியில் இருப்பதை குறைக்க முடியுமா, மேலும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் மற்றும் வருமான உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வருவது உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசனை கேட்டுள்ளார். இந்த அறிக்கையை 9 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரிட்டன் உயர் அதிகாரிகள் கூறுகையில்; பொதுவாக பிரிட்டனின் வளர்ச்சியில் வெளிநாட்டவர்கள் பங்கு மிக முக்கியம். அவர்களை நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும் பிரிட்டனில் குடியிருப்போருக்கும் , உள்ளூர் மக்களுக்கும் வேலை உறுதி தன்மையை நிலைநிறுத்தவே இந்த முயற்சி எனவும் கூறியுள்ளனர்.

இதனால் இந்தியர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு வரும் என்பது போக, போக தெரியும்.

  • Palani பழனி கோவில் ராஜகோபுரம் சேதம் : ஆபத்து பக்தர்களுக்கா..? அரசுக்கா.?
  • Views: - 427

    0

    0