ஆணவக்கொலை குறித்த நடிகர் கருத்து: சமூக அமைதியை சீர்குலைக்கிறது: காவல் ஆணையரிடம் விசிக புகார்…!!

Author: Sudha
12 August 2024, 5:36 pm

ஆணவக்கொலை குறித்து நடிகரும் கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் இயக்குனருமான ரஞ்சித் ஆணவக் கொலை தவறு இல்லை என்ற ரீதியில், பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையினால் வரும் கோவம் தான் அது வன்முறை அல்ல என பேசி இருந்தார் இது சமூக வலைதளங்களில் சூடான விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இதற்கிடையே ரஞ்சித் பேசியது, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது என்றும், இதுபோன்ற கருத்துக்களை பரப்புவது கவலை அளிக்கிறது என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆணவக்கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடிகர் ரஞ்சித் பேசி வருவதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக புகார் அளித்துள்ளது.

ரஞ்சித் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்