₹525 கோடி ஏப்பம்.. தனியார் தொலைக்ககாட்சி நிறுவனரும், பாஜக வேட்பாளராக களமிறங்கிய தேவநாதன் யாதவ் கைது.!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2024, 4:06 pm

மயிலாப்பூர் சிட் ஃபண்ட்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி பொது மக்களிடம் பணம் பெற்று திருப்பித் தராமல் ஏமாற்றியதாக வந்த புகாரை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியான வின் தொலைக்காட்சி உரிமையாளர் தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர்சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டு அங்கு விசாரணை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்த சென்னைக்கு காவல்துறையினர் காவல்துறைவாகனத்தில் சென்னை அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட தேவநாதன் இந்திய கட்சி கல்வி முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணியாக இணைந்து போட்டியிட்டு தோல்வியை கண்டவர்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?