அண்ணாமலை என்ன அவதாரப் புருஷனா? கட்சியை வளர்க்கற வேலையை மட்டும் பாக்கணும் : ஆர்.பி உதயகுமார் விளாசல்!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2024, 10:30 am

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;

முல்லை பெரியாறு அணைமீது கேரளா அரசு கண்வைத்து அவதூறு பரப்பி கொண்டே வருகிறது. அணை வலுவாக உள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு சாதகமாக வந்தது.

புதிய அணை கட்டவேண்டும் என்று கேரளா மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகள் வந்த போதிலும் கேரள நீர்வளம் துறை அமைச்சரே பொய்யான தகவலை சொல்லுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்கும் விதத்தில் வேளாண் பெருமக்கள் அச்சமின்றி இருப்பதற்கு ஏற்ப எந்தவித உத்தரவாதமும் விளக்கமும் தமிழக முதலமைச்சர் தரப்பில் தரவில்லை,

இன்றைக்கு ஆவினில் பத்தாயிரம் லிட்டர் பால் கெட்டுப் போய்விட்டு நிலையில், விநியோகம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைக்கு துணை முதல்வர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பை வேண்டுமென்றே கட்டமைத்து வருகின்றனர். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாய் அமைச்சரவை கூட்டத்தை தவிர்த்துள்ளார்.

பாஜகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் அண்ணாமலைக்கு எட்டு முறை பிரதமர் பிரச்சாரம் வந்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி நிதியை அண்ணாமலையாலே பெற்றுத் தர முடியவில்லை.

தமிழ்நாட்டு மக்களுக்கு தான் அரசியல் கட்சியின் ஆயுளை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர். அண்ணாமலை தான் அவதார புருஷன் போன்ற அதிமுகவின் அரசியல் ஆயுளை நிர்ணயிக்கப் போவதாக தன்னை கருதி கொள்கிறார்.

இன்றைக்கு கிராமங்கள் தோறும் அதிமுக சார்பில் இரண்டாம் கோடி தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக மக்களின் இதயங்களில் முதல் இடத்தில் உள்ளது.

தேர்தல் எப்போது வந்தாலும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வருவார், அதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

அண்ணாமலை திமுகவை எதிர்த்து அரசியல் செய்தால் பாஜக தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. அதிமுக தொண்டர்களே சோர்வடைய வைப்பது தவறான செயல்.

மிகக் குறுகிய கால அரசியல் அனுபவம் கொண்டு விளம்பர அரசியலுக்கு ஆசைப்பட்டு அனைத்து தலைவர்களையும் வம்பிழுக்கும் அண்ணாமலை தமிழ்நாட்டு மக்களே ஏமாற்றி வருகிறார்.

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுபார்.

கலைஞர் கருணாநிதியை மக்கள் மறந்து விட்டனர், தற்போது தமிழ்நாட்டின் முதல்வர் என்பதால் அவரது 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது அவ்வளவுதான்.

மறைந்த தலைவர்களை தனிநபர் விமர்சனத்தை செய்வோர்களை தலைவர்கள் அமைதி காத்து அவமதித்தால் அது தவறானது. எனவே தாமோ அன்பரசனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். இதை கோரிக்கையாக விடுகிறேன்.

ஆயிரம் ரூபாய் திட்டம் எந்த மாணவர்கள் கேட்டார்கள்..? மடிக்கணினி திட்டத்தை நிறுத்திவிட்டு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். அதே வேளையில் பத்தாயிரம் ரூபாய் புறவாசல் வழியாக பாடநூல் விலை ஏற்றத்தில் பெறுகின்றனர்.

  • Sivakarthikeyan Dhanush in Party Dance Video சிவகார்த்திகேயனுடன் குத்தாட்டம்.. VIBE MODEல் தனுஷ்… : மாஸ் வீடியோ!
  • Views: - 233

    0

    0