பாலம் கட்டும் பணியில் அலட்சியம்: தலையில் குத்திக் கீறிய கம்பி: துடிதுடித்து பலியான இளைஞர்….!!

Author: Sudha
14 August 2024, 12:45 pm

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியில் சிறு பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் போதிய அளவு மூடாமல் அலட்சியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழுவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாதை தெரியாமல் தடுமாறி பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பாலத்தின் கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பியில், மணிகண்டனின் தலை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் , நெடுஞ்சாலைத் துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?