தனியார் ஐடிஐ மாணவரை சரமாரியாக தாக்கி மன்னிப்பு கேட்கச் சொன்ன சக மாணவர் மற்றும் இளைஞர்… ஷாக் சம்பவம்!!!

Author: Sudha
14 August 2024, 2:43 pm

மயிலாடுதுறை மாவட்டம் மடவிளாகம் பகுதியில் ஐடிஐ படிக்கும் மாணவனை சக மாணவன் மற்றும் ஒரு இளைஞர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மாயூரநாதர் ஆலயம் மேலவீதியில் உள்ள தனியார் ஐடிஐ மாணவர்கள் என்று சொல்லப்படும் சிலர் வீடியோவில் சீருடை அணிந்த மாணவனை மாறி மாறி முகத்திலும் பிடரியிலும் தாக்கியவாறு வீடியோ காலில் உள்ள நண்பனிடம் மன்னிப்பு கேட்க வைத்து தொடர்ந்து அவர்கள் தாக்குவதை வீடியோவாக எடுத்துள்ளனர்.

அடித்தது போதுமா சிங்கம் இன்னும் அடிக்கவா எனக்கு பத்தலை என்று கூறியவாறு மாணவனை இருவர் தாக்கும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அனைவரும் தங்களது கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.

காவல்துறை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நியைத்திற்கு புகார் வரவில்லை என்றும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • Maharaja movie box office in China பிரமாண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 340

    0

    0