இளைஞர்கள் மீது திருங்கைகள் நடத்திய தாக்குதல்: வெளியான சிசிடிவி ஆதாரம்: பேருந்து நிலையத்தில் பயங்கரம்…!!
Author: Sudha14 August 2024, 3:42 pm
தென் தமிழகத்தை இணைக்கும் மிக முக்கியமான நகரமாக விழுப்புரம் நகரம் விளங்கி வருகிறது.இந்தப் பேருந்து நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு 7 மணிக்கு மேல் திருநங்கைகள் திருச்சி கோயம்புத்தூர் பேருந்து நிறுத்தத்தில் ஒன்று கூடுகின்றனர்.
அப்போது இளைஞர்களோ அல்லது மது போதையில் வருபவர்களை நோட்டமிட்டு அவர்களை தனியாக அழைத்து வந்து மிரட்டி அவர்களிடம் பணம் பறிப்பதும் செல்போன்களை பறித்து செல்வதும் வாடிக்கையாக்கி வருகிறது.
இதில் அந்தப் பக்கம் வரும் முதியவர்களையும் விட்டு வைப்பதில்லை. இது குறித்து பயணிகள் அவமானப்பட்டு காவல் நிலையத்தில் யாரும் புகார் கொடுக்க முன் வருவதில்லை.அப்படியே ஒரு சிலர் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் காவலர்களையும் ஒருமையில் பேசி விரட்டுவதாக பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் யாராவது தட்டி கேட்டால் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதும் உறக்க கைத்தட்டி கொண்டு ஆரவாரம் செய்தபடி தாக்கவும் செய்கிறார்கள் என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இப்படி திருநங்கைகள் முகம்சுழிக்கின்ற அளவிற்கு நடந்து கொள்வதால் பெண்களும் குழந்தைகளும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது புதிய பேருந்து நிலையத்திலகடை ஒன்றில் இருக்கும் சிசிடிவி கட்சியில் இரண்டு இளைஞர்கள் நடந்து சென்ற திருநங்கையை அழைத்து பேரம் பேசும் போது வாய் தகராறு ஏற்பட்டு இரண்டு இளைஞர்களையும் பிடித்து மூன்று திருநங்கைகள் ஒன்றிணைந்து அடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதுபோல தினந்தோறும் இந்த புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறுவதாக வியாபாரிகள் மற்றும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் காவல்துறையினர் இதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.