“தங்கலான்” டால் அடிக்கும்னு பார்த்தால் டல் அடிக்குது – விக்ரமை பொளந்துகட்டும் ரசிகர்கள்!

Author:
15 August 2024, 10:09 am

சீயான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இடையில் உருவாகி வந்த இந்த திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜி வி பிரகாஷ் இசையமைப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகி வெளிவந்திருக்கிறது. இந்த திரைப்படம் இன்று சுதந்திர தின கொண்டாட்டமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த ஆடியன்ஸ் எல்லோருமே கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைக்கும் என எதிர்பார்த்த சமயத்தில் படத்தைப் பார்த்த சில ரசிகர்களின் எதிர்மறையான விமர்சனங்கள் அதிருப்தி ஏற்படுத்தி இருக்கிறது. விக்ரமின் வித்தியாசமான தோற்றத்திற்கும் அவரது கதாபாத்திரத்தையும் பார்த்து படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள்.

ஆம், இந்த படத்தை பார்த்த கிறிஸ்டோபர் கனகராஜ் என்ற ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தங்லான் – மங்கலான்”என கேப்ஷன் என படத்திற்கு காட்டமான விமர்சனம் கொடுத்துள்ளார். தங்கலான் படம் டால் அடிக்கும் என்று எதிர்பார்த்தால் டல் அடிக்கிறது, சாரி சியான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோபிக் கௌஷிக் என்ற ரசிகர்… படம் ரொம்ப சுமார்…சியான் விக்ரம் மற்றும் பார்வதி நல்லா நடிச்சிருக்காங்க.. ஆனால், படத்தில் வேற ஒன்றும் ரசிக்கும்படி இல்லை. ரஞ்சித்தோட வீக்கஸ்ட் படம் இது எனக்கு சுத்தமாக புடிக்கல. சாரி சியான் விக்ரம் ரசிகர்களே அடுத்து நமக்கு தரமான படமாக வீர தீர சூரன் வரும் என்றுகூறியுள்ளார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!