ஆளுநரின் Tea party தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.. ஆனா ஒரேயொரு டிவிஸ்டு..!

Author: Vignesh
15 ஆகஸ்ட் 2024, 11:46 காலை
Quick Share

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இது தொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் திமுக சார்பில் ஆளுநரின் தேர்நீரில் இருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.

அதேபோல், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியும் ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படித்தான் தேநீர் விருதை புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள் என்றார்.

இதேபோல், திமுக கூட்டணி கட்சிகள் அனைத்துமே ஆளுநரின் தேநீர் விருந்தில் புறக்கணிப்பதாக அறிவித்தனர். ஆனால், சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில், பங்கேற்கும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை கோட்டையில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

இதன் பின்னர், பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கும் ஆளுநர் என்ற பதவிக்கு மதிப்பளித்து தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் தேநீர் விருதில் பங்கேற்பார் என தெரிவித்திருந்தார். அதாவது, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் யாரும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்கள். அதே நேரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரின் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.

  • விஜய் சொன்னது சரிதான்.. ஜெயக்குமார் போடும் கணக்கு!
  • Views: - 112

    0

    0