தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய பலியான மூவர்: பெண்கள் நிலை என்ன?! விடுமுறை நாளில் நடந்த துயரம்…!!

Author: Sudha
15 August 2024, 4:45 pm

சிவகாசியை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் சேர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளித்துள்ளனர்.அப்போது குளித்துக் கொண்டிருந்த முருகனின் மகள்கள் மேனகா, சோலை ஈஸ்வரி மற்றும் அவரது உறவினர் மாரீஸ்வரன் என 3 பேர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள், உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் மாரீஸ்வரன் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற இருவரின் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Aamir Khan Quit Smoking for Son மகனுக்காக அதை பண்ண ரெடி…பட விழாவில் அமீர் கான் பரபர பேச்சு..!
  • Views: - 229

    0

    0