மத்திய அரசால் ஒதுக்கப்பட்டதா தமிழ்நாடு? காட்டிக்கொடுத்த பிங்க் புக்: நிதி வெறும் 1000 ரூபாயா..!?

Author: Sudha
16 ஆகஸ்ட் 2024, 12:58 மணி
Quick Share

லோக்சபா தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்ட நிதி, 2024-25 முழுமையான பட்ஜெட்டில் குறைக்கப்பட்டது

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் கணிசமான அளவு குறைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட முழு பட்ஜெட்டில் இரட்டிப்பு முதல் புதிய வரித் திட்டங்கள் வரை நிதி குறைக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு 976 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள முழுமையான பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் அந்த நிதி 301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சேலம் – கரூர் – திண்டுக்கல் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெறும் ரூபாய் 1,000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை – மகாபலிபுரம் – கடலூர் இடையே 179 கி.மீ கடற்கரை பாதைக்கு 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு பழனி இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த 91 கி.மீ திட்டத்துக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை (70 கிமீ), ஈரோடு – பழனி (91.05 கிமீ), அத்திப்பட்டு ஆகிய ஐந்து புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Vijay விஜய் பற்ற வைத்த நெருப்பு : பதறி ஓடி வந்த திமுக.. 75 ஆண்டு திமுக வரலாற்றில் புதுசு!!
  • Views: - 288

    0

    0