திறக்கப்பட்ட மர்ம தேசம்: உலகை வரவேற்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்: அவிழப்போகும் மர்ம முடிச்சு…!!

Author: Sudha
16 August 2024, 4:23 pm

5 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது வடகொரியா. கொரோனாவுக்கு முன்பே தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட நாடு வடகொரியா…

வடகொரியா என்றாலே அணு ஆயுதங்கள்… ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான தலைவர் கிம் ஜாங் உன் தான் பலருக்கும் நினைவுக்கு வருவார். ஆனால் உண்மையிலேயே எண்ணற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த அழகான ரகசிய பிரதேசம் தான் இந்த வடகொரியா…

வடகொரியாவையும் சரி… அங்கு சுற்றுலா செல்பவர்களையும் சரி…உலகமே சற்று வித்தியாசமாகத் தான் பார்க்கும்.நீங்கள் வடகொரிய எல்லையை மிதித்து விட்டாலே ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடப்படும்.நிச்சயம் அது ஒரு திட்டமிடப்பட்ட சுற்றுலாவாகத்தான் இருக்கும்…இந்தியாவைப் போல் எங்கு வேண்டுமானாலும் வடகொரியாவில் சுற்றுலா பயணிகள் சுற்றித் திரிய முடியாது…எப்போதும் உங்களை கண்காணித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.அவர்கள் அனுமதிக்கும் இடத்தை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.அனுமதி இல்லாமல் நினைக்கும் இடத்தில் எல்லாம் செல்ஃபி எடுக்க முடியாது.வடகொரிய தலைவர்களைப் பொறுத்தவரை அந்நாட்டு மக்களுக்கு கடவுள்களைப் போன்றவர்கள்…அவர்களின் படத்தையோ,சிலைகளையோ அவமதித்தால் கொலைக்குற்றம் போல் கருதப்படும்.

கொரோனா காலத்தில் மூடிய எல்லைகளை எப்போதோ மற்ற நாடுகளெல்லாம் திறந்து விட்டன.சுற்றுலாத்துறை ஆட்டம் கண்டதாலோ என்னவோ, இப்போதுதான் கதவுகளைத் திறக்க மனம் வைத்துள்ளது வடகொரியா.

மலைகள் நிறைந்த வடக்கு நகரமான சாம்ஜியோனில் விரைவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோல் வடகொரியாவின் மற்ற பகுதிகளுக்கு வரும் டிசம்பரில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1503

    0

    0