மின் கம்பி மீது உரசிய அரசு பேருந்து.. உயிருக்கு போராடிய ஓட்டுநர் : கோத்தகிரியில் நடந்த கோர சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan16 August 2024, 7:20 pm
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூட்டாடா கிராமத்திலிருந்து இன்று அதிகாலை வழக்கமாக அரசு பேருந்து கோத்தகிரி நோக்கி ஓட்டுனர் பிரதீப் வயது 40 இயக்கி சென்றுள்ளார்.
அப்போது கோவில்மட்டம் அருகே அரசு பேருந்து செல்லும் போது சாலையில் தாழ்வான நிலையில் இருந்த மின் கம்பிகள் மீது பேருந்து உரசியதில் ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அறிந்த நடத்துனர் உடனடியாக காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மின் இணைப்பை துண்டித்து ஓட்டுனரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் காற்றுடன் கூடிய பெய்து வரும் மழை காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக இருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
அப்போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் ஆனது தவிர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர் இந்த நிலையில் அரசு பேருந்து மீது மின்சாரம் தாக்கி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.