பிரசாந்துக்கும் விக்ரமுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. சண்டைக்கு காரணமே அவங்க அப்பா தான்..!

Author: Vignesh
17 August 2024, 11:25 am

90களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இப்போது, டாப் லெவலில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரமை விட பிரசாந்துக்கு அப்போது கிரேஸ் அதிகமாக இருந்தது என்றே சொல்லலாம். ஆண் ரசிகர்களை காட்டிலும் பிரசாத்துக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தனர்.

முன்னதாக, இப்போது உச்ச நடிகராக இருக்கக்கூடிய விக்ரமின் உறவுக்காரர் தான் பிரசாந்த் ஆனால், இருவருக்கும் கடந்த சில வருடங்களாகவே பிரச்சனை இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து, திரை விமர்சகர் சிவபாலன் சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், இப்படி உச்சத்தில் சென்று கொண்டிருந்த பிரசாத்துக்கு சில சருக்கள் ஏற்பட்டதாகவும், அதற்கு முக்கியமான காரணம் பிரசாந்தின் முன்னாள் மனைவிக்கும் அவருக்கும் நடந்த பிரச்சனைதான் என்று கூறப்படுகிறது. மேலும், அந்த பிரச்சனையில் கவனம் செலுத்தியதால்தான் பிரசாந்தால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு வழியாக இப்போது அந்தகன் படத்தில் ஹீரோவாக நடித்து நல்ல ரெஸ்பான்ஸ் பிரசாந்துக்கு கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில், தமிழ் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கக்கூடிய விக்ரமுக்கும் பிரசாந்துக்கும் கடந்த சில வருடங்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது.

ஆனால், பிரசாந்துக்கும் விக்ரமுக்கும் நேரடியாக எந்த பிரச்சனையும் இல்லையாம். விக்ரமின் தந்தைக்கும், பிரசாந்தின் தந்தைக்குமான பிரச்சனை தான் குடும்ப பிரச்சினையாக மாறி உள்ளது. விக்ரமின் தந்தை தான் கில்லி படத்தில் திரிஷாவின் தந்தையாக நடித்தவர். அவர் பரமக்குடியில், இருந்து சினிமா ஆசைக்காக சென்னைக்கு வந்தவர்.

அவரும் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் நெருங்கிய நண்பர்கள். அவர் தியாகராஜனின் அக்காவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது தியாகராஜனுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும், பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை என்னவென்றால் என்னவென்று இன்னும் அளவில் இவர்கள் உறவு இருந்து வருவதாக திரை விமர்சகர் சிவபாலன் கூறியுள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!
  • Close menu