சும்மாவா சொன்னாங்க பிரம்மாண்டம்னு… இயக்குனர் சங்கரின் சொத்து எத்தனை கோடி தெரியுமா?

Author:
17 August 2024, 1:51 pm

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்திருப்பவர் தான் இயக்குனர் சங்கர். இவர் இயக்கும் திரைப்படங்களில் தொழில்நுட்ப அருமை மற்றும் பிரம்மாண்டம் அதிரடியான சமூக கருத்துக்களை உள்ளடக்கி பேசப்படும்.

இவர் எஸ் ஏ சந்திரசேகரிடம் துணை இயக்குனராகப் பணியாற்றி படம் எடுக்கும் நேக்குகளை அவரிடம் கற்றுத் தெரிந்து பின்னர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Shankar

முதன் முதலில் 1993 ஜென்டில்மேன் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆனார். முதல் படமே வெற்றி படமாக அமைய காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன்,சிவாஜி, எந்திரன், நண்பன்,உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை எழுதி இயக்கியுள்ளார்.

கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்து விட்டது. இந்த நிலையில் ஷங்கரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வியக்க அமைந்துள்ளது.

ஒரு படத்தை இயக்க ரூ.50 கோடி சம்பளமாக வாங்கும் இயக்குனர் சங்கரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.150 கோடி என கூறப்படுகிறது. இதில் சென்னை மற்றும் மும்பையில் மிகப்பெரிய சொகுசு பங்களா மற்றும் பல வகை வகையான சொகுசு கார்கள் ,அத்துடன் ரியல் எஸ்டேட்டில் பல கோடி முதலீடு உள்ளிட்டவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 133

    0

    0