சான்ஸ் கிடைச்சா வேண்டாம்னு சொல்வேனா? விஜய் கட்சி தொடங்கியது குறித்து நடிகர் செந்தில் சுளீர்..!!
Author: Udayachandran RadhaKrishnan17 August 2024, 2:22 pm
வடசென்னை எண்ணூர் விரைவு சாலை திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு புஷ்பாஞ்சலி பூஜையானது நடைபெற்றது இதில் நகைச்சுவை நடிகர் செந்தில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஆண்டுதோறும் இந்த கோவிலுக்கு வருவதால் தாம் நல்ல பயன் அடைவதாகவும், பொதுமக்களும் வந்து அம்மன் அருளை பெற வேண்டூம் என்றும் கூறினார்.
விஜய் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு அதெல்லாம்வேண்டாம் கேட்காதீங்க என்பதை போல அந்த கேள்வியை தவிர்த்து நழுவினார்
மேலும் கவுண்டமணியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் வாய்ப்பு கிடைத்தால் விட்டு விடுவேனா? வேண்டாம் என சொல்வேனா? என கூறி மீண்டும் இணைந்து நடிக்கும் தனது விருப்பத்தை தெரிவித்தார்