வயநாடு மக்களுக்கு உதவி ஜவுளிக் கடை உரிமையாளர் நடத்திய மொய் விருந்து.. விழாவில் பங்கேற்ற நடிகை அறந்தாங்கி நிஷா!

Author: Udayachandran RadhaKrishnan
17 ஆகஸ்ட் 2024, 4:16 மணி
aranthan
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மொய் விருந்து நடைபெற்றது

வத்தலகுண்டு பிரபல ஜவுளி நிறுவனம் சார்பில் நடைபெற்ற மொய் விருந்தினை தமிழ் திரைப்பட நடிகை அறந்தாங்கி நிஷா மற்றும் அறக்கட்டளை நிர்வாகி அருள்மெர்சி செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

வயநாடு நிவாரணத்திற்காக நடந்த மொய் விருந்தில் வத்தலக்குண்டு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உணவருந்தி விட்டு தங்களால் முடிந்த பணத்தினை நிவாரணப் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்

விருந்தின் முடிவில் நிவாரண பெட்டியை திறந்தபோது ரூபாய் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 430 ரூபாய் பொது மக்களால் நிவாரணமாக வழங்கப்பட்டிருந்தது. மொய் விருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான முகமது அராபத் கூறும்போது நிவாரண பெட்டியில் மட்டும் அல்லாமல் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆன்லைன் மூலம் நிவாரண பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார் ஜவுளி கடை நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்

மொய் விருந்தின் மூலம் வத்தலகுண்டு பொதுமக்களால் வழங்கப்பட்ட நிவாரணத் தொகை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 194

    0

    0