கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை: விக்சித் பாரத்: பிரதமர் மோடி புகழாரம்…!!

Author: Sudha
18 ஆகஸ்ட் 2024, 9:47 காலை
Quick Share

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட உள்ளது.வெளியீட்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். ‘2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கலைஞரின் தொலைநோக்கு பார்வை உதவும். அரசியல், இலக்கியம், சமூகப் பணிகளில் அளப்பரிய பங்காற்றியுள்ளார் கலைஞர்.நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர்” என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் பிரதமரின் கடிதத்தில் இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம் இது. கலைஞர் கருணாநிதி இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்தில் ஒரு உயர்ந்த ஆளுமை. தமிழகத்தின் வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார்.

பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர் கருணாநிதி.அவரது இலக்கியத் திறன் அவரது படைப்புகளால் ஒளிர்ந்தது மற்றும் அவருக்கு ‘கலைஞர்’ என்ற அன்பான பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

இந்த நாணயம் அவரது மரபு மற்றும் அவரது பணியின் நீடித்த தாக்கத்தை நினைவூட்டுவதாக இருக்கும்.
இந்த முக்கியமான தருணத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் விக்சித் பாரத் என்னும் இலக்கை நோக்கி நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனைகளும் தேசத்தின் பயணத்தைத் தொடர துணை செய்யும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அன்பான வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Vijay விஜய் பற்ற வைத்த நெருப்பு : பதறி ஓடி வந்த திமுக.. 75 ஆண்டு திமுக வரலாற்றில் புதுசு!!
  • Views: - 247

    0

    0