டிடிஆர் மீது நடத்தப்பட்ட சரமாரி தாக்குதல்: டிக்கெட் கேட்டதால் எகிறிய பயணி : களேபரம் ஆன ரயில் பயணம்…!!
Author: Sudha18 August 2024, 2:05 pm
அனிகேத் போசலே என்ற நபர் ,மும்பை சர்ச்கேட்டில் இருந்து விரார் என்ற பகுதியை நோக்கி லோக்கல் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தலைமை டிக்கெட் பரிசோதகர் ஜஸ்பீர் சிங், பயணியிடம் ஏசி கோச்சில் பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாததைக் கண்டறிந்துள்ளார். எனவே, அபராதம் கட்டச் சொன்னார்.
இதற்கிடையே, அபராதம் குறித்து அனிகேத் போசலே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது, அடிதடியில் முடிந்துள்ளது. ஜஸ்பீர் சிங்கும் மற்ற பயணிகளும் டிக்கெட் பரிசோதகரை தாக்கியுள்ளனர். மேலும், டிக்கெட் பரிசோதகரின் சட்டையை கிழித்ததாகவும் கூறப்படுகிறது.
இதை, யாரோ வீடியோ எடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் டிக்கெட் பரிசோதகர் காயமடைந்தது மட்டும் இன்றி, மற்ற பயணிகளிடம் இருந்து அபராதமாக வசூலித்த 1,500 ரூபாயையும் பறி கொடுத்துள்ளார்.
இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பணியாளர்களால் நளசோபரா நிலையத்தில் ரயிலில் இருந்து அந்த பயணி இறக்கிவிடப்பட்டார்.மேலும் பயணியிடம் அபராதத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தியதுடன், ஜஸ்பர் சிங்கிடம் முறை தவறி நடந்து கொண்டதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பினர்.பயணி ஒருவர் டிக்கெட் பரிசோதகரைத் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.