செயின் பறிக்க முயன்ற ஆசாமி: அடுத்த நொடி நடந்த அசம்பாவிதம்: காவல்துறை விசாரணை….!!
Author: Sudha18 August 2024, 3:39 pm
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆலப்பாக்கம் மேம்பாலத்தில், கணவன் மனைவி, 2 குழந்தைகள் என 4 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றபோது, 2 இருசக்கர வாகனங்களும் சாய்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் கணவன் மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த கணவன், மனைவி இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செயின் பறிக்க முயன்று தப்பிச்சென்ற அஜித்குமார் என்பவர், குள்ளஞ்சாவடி சாலையில் விழுந்ததாக கூறி கடலூர் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனது தெரியவந்தது.
அவரை கைது செய்த புதுச்சத்திரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.