விநாயகர் சதுர்த்திக்கு அதிரடி கட்டுப்பாடுகள்.. சிலை உயரத்துக்கு நிபந்தனை : பட்டாசு வெடிக்க தடை!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2024, 6:57 pm

விநாயகர் சதூர்த்தி விழா செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தவுள்ளனர்.

கடந்த ஆண்டை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான சிலைகள் போலீசார் அனுமதியோடு பல இடங்களில் வைக்கப்பட்டு அடுத்த ஒரு சில நாட்களில் கடற்கரையில் கரைக்கப்பட்டது. இந்தநிலையில் இந்தாண்டு விநாயகர் சதூர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக டிஜிபி அறிவித்துள்ளார்.

அதன்படி, வேற்று மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் விநாயகர் சிலை வைக்க கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை கொண்டு செய்யக் கூடாது என கூறியுள்ளார்.

தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்படும் சிலைகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் உயரம் இருக்கக் கூடாது.

மேலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின்போது பிற மதத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பக் கூடாது எனவும் ஒலிபெருக்கியில் வைப்பதற்கு அந்த, அந்த பகுதியில் உள்ள காவல் ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் பெறுவதற்கான விபரத்தையும் கடிதம் வாயிலாக கடிதம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் அந்த அறிவிப்பில் டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதே போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது. மேலும் பதற்றமான பகுதிகள் வழியாகவும் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்ற வழிபாட்டு தலங்களை ஊர்வலம் கடந்து செல்லும்போது மேளதாளங்களை இசைக்கவும் பட்டாசுகளை வெடிக்கவும் அனுமதிக்க கூடாது என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 301

    0

    0