ரஷ்யாவில் வேலை வாய்ப்பா: கவனமுடன் இருங்கள்: எங்கள் மகனை இழந்து விட்டோம்: கதறும் குடும்பம்…!!

Author: Sudha
19 August 2024, 9:25 am

ரஷ்யா சார்பில் போரில் ஈடுபடுவதற்கு அந்நாட்டினர் அதிகம் முன் வருவதில்லை. இதனால் வேலை தேடி வரும் வெளிநாட்டினருக்கு ஆசை வார்த்தை கூறி, போரில் ஈடுபடுத்துகின்றனர். இதில் விவரம் தெரியாமல் சென்று மாட்டிக்கொள்ளும் அப்பாவிகள் உயிரிழக்கின்றனர். எனவே ரஷ்யா வேலைவாய்ப்பு என்றால், கவனத்துடன் இருப்பது நல்லது என கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

திரிச்சூரின் நாயாரங்கடியைச் சேர்ந்த கன்கில் சந்திரன் என்பவரின் மகன் சந்தீப், இவர் கேரளாவைச் சேர்ந்த 7 பேருடன் கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி ஏஜென்சி மூலம் ஓட்டலில் வேலை செய்வதற்காக ரஷ்யா சென்றுள்ளார்.

அங்கு ரஷ்யாவின் ராணுவ கேண்டீனில் பணியாற்றி வந்துள்ளார்.இந்த சூழலில், ரஷ்யாவின் குடியுரிமை பெற வேண்டும் என்று ஆசையினால், ரஷ்ய ராணுவத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.அப்போது அவர் உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டார்.

அவர் இருந்த ராணுவ வாகனம் மீது, உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், சந்தீப் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது. சந்தீப் உயிரிழந்ததை ரஷ்யாவின் மலையாளிகளின் சங்கம் உறுதி செய்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் உடலை பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சந்தீப் குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ‘மாஸ்கோவில் ரெஸ்டாரன்டில் வேலை என்று தான் முதலில் சந்தீப் கூறினார். பின்னர், ரஷ்யாவின் ராணுவ கேண்டீனில் பணி கிடைத்துள்ளதாகவும், அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் எங்களிடம் கூறினார். ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றத் தொடங்கிய பிறகு எங்களிடம் தொடர்பு கொள்ளவில்லை. ரஷ்யாவில் உள்ள அவரது நண்பர்களுடனும் சரிவர பேசிக்கொள்வதில்லை. அவரது உடலை மத்திய அரசு தலையீட்டு பெற்றுத் தர வேண்டும்’ எனக் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Vijay Confirms Love with Actress திருமணத்தில் இணையும் அடுத்த நட்சத்திர ஜோடி… தீயாய் பரவும் தகவல்..!!
  • Views: - 731

    0

    0