சிறந்த செவிலியர் விருது: ஆனால் வாங்குவது லஞ்சம்: அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்….!!

Author: Sudha
19 August 2024, 10:05 am

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ஷீலா.அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது அவருடைய சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழை பெற்றிருந்தார்.

இந்நிலையில் செவிலியர் ஷீலா மருத்துவமனையில் பொதுமக்களிடம் மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே லஞ்சம் வாங்குவதாக வீடியோ காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவம் புகைச்சலை ஏற்படுத்த,இது குறித்து சம்பந்தப்பட்ட செவிலியர் ஷீலாவிற்கு மெமோ கொடுத்துள்ளதாக பட்டுக்கோட்டை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மீனா தெரிவித்துள்ளார்.

அவர் தற்பொழுது விடுப்பில் சென்றுள்ளதால் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மெமோ கொடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற செவிலியர் லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?