விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி உச்சத்தை தொட்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அம்ரித்தா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா. சீரியல் மட்டும் இல்லாமல் இவர் குக் வித் கோமாளி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.
ரித்திகா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன்1ல் வினோதினி என்ற கேரக்டரில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் 8 மற்றும் நம்மவர் கமல் போன்ற பல ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொண்டு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த 2022-ஆம் ஆண்டில் ரித்திகாவிற்கு வினு என்பவருடன் கேரள முறைப்படி மிகவும் சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. அதை எடுத்து ரித்திகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். கணவர் வினு உடன் சேர்ந்து அண்மையில் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி இருக்கிறார் .
8 மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரித்திகாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது. இந்நிலையில் தற்போது ரித்திகாவுக்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தியுள்ளனர்.
அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் குக் வித் கோமாளி அபிராமி, சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்துக்கொண்டுள்ளனர்.
,