கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத மீனவர்கள்; 265 விசைப்படகுகள் நிறுத்தம்..!

Author: Vignesh
19 August 2024, 3:13 pm

ஐஸ் கட்டிகளுக்கு பார் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வழங்க கோரி ஐஸ்கட்டி உரிமையாளர்கள் விசைப்படகுகளுக்கு ஐஸ் கட்டிகள் வழங்காததால் 265 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 265க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகளுக்கு தேவையான ஐஸ் கட்டிகளை ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் உரிமையாளர்கள் வழங்கி வந்தனர். இந்நிலையில், மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வு காரணமாக உற்பத்தி செலவு அதிகமாவதால் ஐஸ் கட்டிகளுக்கு கூடுதலாக பார் ஒன்றுக்கு பத்து ரூபாய் வழங்க வேண்டுமென ஐஸ்கட்டி உரிமையாளர்கள் விசைப்படகு உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதை விசைப்படகு உரிமையாளர்கள் ஏற்காததை தொடர்ந்து விசைப்படகுகளுக்கு ஐஸ் கட்டிகள் நேற்று வழங்கப்படவில்லை இதைத்தொடர்ந்து இன்று விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 265 படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 705

    0

    0