ஆதரவற்றோர் இல்லத்தில் அதிர்ச்சி : சமோசா சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு.. 24 பேர் கவலைக்கிடம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2024, 10:44 am

ஆதரவற்றோர் அனாதை இல்லத்தில் சமோசா சாப்பிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி மாவட்டம் கொடவுரட்லா மண்டலம், கைலாசப்பட்டினத்தில் உள்ள ஆதரவற்றோர் அனாதை இல்லத்தில் 60க்கும் மேற்பட்ட சிறார்கள் தங்கி உள்ளனர்.

இவர்கள் அனைவரும் இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அனாதை இல்லத்தில் மாணவர்கள் சாப்பிட்ட சமோசா காரணமாக ஃபுட் பாய்சன் ஏற்பட்டு அனைவரும் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர்.

உடனடியாக சீறார்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒன்பது வயதான ஜோசுவா, பவானி மற்றும் ஷ்ரத்தா ஆகிய மூன்று பேர் இறந்தனர்.

மேலும் 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களை மேல் சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் அரசுக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுபுறம், இந்த சம்பவத்திற்கு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தன்னை மிகவும் பாதித்துள்ளது இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார், அனகப்பள்ளி, அல்லூரி சீதாராமராஜு மாவட்ட கலெக்டர்களிடம் பேசிய அவர் அனகாப்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 17 மாணவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் இந்த சம்பவத்தை ஆந்திர அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் . அங்கீகாரம் இல்லாத விடுதியை உடனடியாக மூட உத்தரவிடவும் அங்குள்ள குழந்தைகளின் பொறுப்பை அரசே ஏற்கும் என்றும், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • amazon prime bagged jana nayagan movie for 115 crores ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…