பவர் ஸ்டாருடன் திருமணம்?.. கல்யாண சர்ச்சைகளுக்கு பதிலளித்த வனிதா விஜயகுமார்..!

Author: Vignesh
20 August 2024, 12:27 pm

தமிழ் சினிமாவில் தொட்டதெல்லாம் ஹிட் என்பது போல் தொட்டதெல்லாம் சர்ச்சை என்ற பெயர் போனவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் நடித்து பின்னர் படங்களில் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், வெளியான தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இவர் வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் புதுமுக இயக்குனர் மனோஜ் கார்த்திக் காமராஜர் என்பவர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தினை ஜென் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என் தோழி வனிதா விஜயகுமாரை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று பேசுகிறார்.

அதன்பின், வனிதா உங்கள் தோழியா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களே என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டுள்ளார். உடனே பதிலளித்த வனிதா ஆந்திராவில் நீங்க பவன் கல்யாணை திருமணம் செய்து விட்டீர்களா என்று கேட்கிறார்கள். அதற்கு நான் பவர் ஸ்டார் சீனிவாசனை தான் திருமணம் செய்திருக்கிறேன் என்று ஜாலியாக கூறியதாக வனிதா தெரிவித்திருந்தார்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!