குழந்தையை விட கீர்த்தி கொடுத்த ரியாக்ஷன் தான் செம கியூட்…. வைரல் வீடியோ!

Author:
20 August 2024, 12:44 pm

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் இப்படி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் ரகு தாத்தா. பெண்களின் சுதந்திரம் பற்றிய கருத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்காக எடுக்கப்பட்டிருக்கும் “பேபி ஜான்” திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகை சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது

இந்நிலையில் தற்போது ரகு தாத்தா திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷ் கை குழந்தை ஒன்றுடன் கொஞ்சி விளையாடிய க்யூட்டான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் குழந்தை ரியாக்ஷனை விட கீர்த்தியின் ரியாக்சன் தான் செம க்யூட்டா இருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Good Bad Ugly Full Movie Leaked on Net in HD Print இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!