2 நிமிட பாலியல் திருப்திக்காக தன்னிலை இழக்கும் பெண்கள் தோல்வியடைந்தவர்கள்.. நீதிபதிக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2024, 2:14 pm

கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மைனர் பெண் ஒருவரை இளைஞர் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, மைனர் பெண்ணுக்கும், அந்த இளைஞனுக்கும் காதல் உறவு இருதுவந்ததால் இது வன்கொடுமை ஆகாது என்றும் இதனால் இளைஞனை வழக்கில் இருந்து விடுவித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும், ‘தங்களின் உடல் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை. சுய கண்ணியத்திற்கு ஊறு விளைவித்து வளர்ச்சியைத் தடுக்கும், பாலியல் இச்சைகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.

2 நிமிட பாலியல் திருப்திக்காக தன்னிலை இழக்கும் பெண்கள் சமுதாயத்தின் பார்வையில் தோல்வியடைந்தவர்களாகவே தெரிவார்கள் என்றும் நீதிபதி அறிவுரை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து குற்றவாளி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓஹா, உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து அந்த இளைஞனைக் குற்றவாளி என்று அறிவித்து உத்தரவிட்டார்.

மேலும் இதுபோன்ற சிக்கலான வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவுரை வழங்கினார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!