தமிழ் சினிமான்னா கிள்ளு கீரையா?.. பிரபல நடிகையை வறுத்தெடுத்த செய்யாறு பாலு..!

Author: Vignesh
20 August 2024, 5:09 pm

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்த சங்கீதா பாடகர் கிருஷ் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். எனக்கு தமிழ் பிடிக்கவே பிடிக்காது. தெலுங்கு தான் பிடிக்கும். தெலுங்கு படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை பார்த்து எவ்வளவு பேர் கோபப்பட்டாலும், அது பற்றி எனக்கு கவலை இல்லை.

தெலுங்கு சினிமாவில் கிடைக்கும் மரியாதை தமிழ் சினிமாவில் கொடுக்க மாட்டார்கள். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு இந்த மனப்பான்மை வருவதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை என்று சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி உள்ளார்.

இது குறித்து பேசிய செய்யாறு பாலு ரசிகா எனும் படத்தில் ஆரம்பத்தில் அறிமுகமானவர்தான் இந்த சங்கீதா. பல படங்களில் நடித்தும் இவருக்கு சினிமாவில் சரியான இடம் கிடைக்கவில்லை. கன்னடத்தில், தீப்தி எனும் பெயரிலும் இவர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமா துறையை அதிகம் பிடிக்கும் என்று சொல்ல அவருக்கு கட்டாயம் உரிமை உள்ளது. ஆனால், தமிழ் பிடிக்காது என்றும் தமிழில் தன்னை மதிக்க மாட்டார்கள் என பேசுவது ஏற்புடையது அல்ல.

பிதாமகன் படம் எல்லாம் அவருக்கு மிகப்பெரிய வாழ்க்கையை கொடுத்த படம். வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக மாஞ்சோலை என்னும் படத்தில் நடித்த சங்கீதா தமிழ்நாட்டில் தான் வளர்ந்து நடிகையாக உருவானார். ஆனால், தமிழ் சினிமாவைப் பற்றி இப்படி கேவலமாக பேசுவது வளர்ந்த பின் தெலுங்கு தான் மரியாதை கொடுக்கிறது என்றெல்லாம் பேசுவது மிகவும் தவறான விஷயம். தமிழ் சினிமா என்ன இவருக்கு கிள்ளு கீரையா என செய்யாறு பாலு கண்டித்து பேசி இருந்தார்.

  • Good Bad Ugly Full Movie Leaked on Net in HD Print இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!