இதுக்காகத்தான் இவ்ளோ நாள் WAIT பண்ணினேன்.. கணவனை கத்தியால் குத்திய மனைவி.. திடுக்கிட்ட திண்டுக்கல்!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2024, 11:34 am

திண்டுக்கல் முருகபவனம்- இந்திரா நகரில் வசித்து வருபவர்கள் கண்ணன் (45).இவர் ஒர்க்ஷாப்பில் பணியாற்றி வருகிறார்.

அவரது மனைவி மோகனா தேவி இவர் வீட்டின் அருகே உள்ள சேமியா கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு பெண் குழந்தை நிவேதா ஒன்றும் ஆண் குழந்தை மதன்குமார் என 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் தினசரி மது அருந்தி வந்த நிலையில் நீண்ட நாட்களாக இவர்களுடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகமான மது போதையில் கண்ணன் வீட்டிற்கு வந்த பொழுது மோகனா தேவிக்கும் கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கண்ணன் மனைவி மோகனதேவியை வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குத்த முயற்சித்து உள்ளார்.

அதை தடுத்த பொழுது தான் எடுத்த கத்தி கண்ணன் மீது பாய்ந்ததில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இந்த தகவல் அறிந்து நகர் மேற்கு காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கணவரை மனைவி குத்தி கொலை செய்தாரா அல்லது தகராறு ஏற்பட்ட பொழுது எதார்த்தமாக கொலை நடந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…