மண்டையை பொளக்கும் வெயில்.. Chill Vibe ஆக்கிய திடீர் மழை; ஆனாலும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

Author: Vignesh
21 ஆகஸ்ட் 2024, 11:55 காலை
Quick Share

மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது அதனைத் தொடர்ந்து இன்று காலையும் பல்வேறு இடங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்ததுடன் காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவியர் மிகவும் சிரமமடைந்தனர். இருப்பினும் பருவ மழை காரணமாக வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

  • Palani பழனி கோவில் ராஜகோபுரம் சேதம் : ஆபத்து பக்தர்களுக்கா..? அரசுக்கா.?
  • Views: - 138

    0

    0