₹1.80 லட்சம் தர்றீங்களா முடிச்சிடலாம்.. லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட பேரூராட்சி செயல் அலுவலர் கைது..!

Author: Vignesh
21 August 2024, 2:20 pm

வீட்டுமனை பதிவிற்கு தடையின்மை சான்றிதழ் வழங்க 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலமேடு பகுதியை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சேட்டு என்பவர் திருவெண்ணைநல்லூர் பகுதியில் மகாத்மா காந்தி எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள வீட்டு மனை பிரிவில் சில வீட்டு மனைகளை வாங்குவது தொடர்பாக சார் பதிவாளர் அலுவலகம் சென்றபோது, அங்கு திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் மேற்கண்ட நிலத்தினை பதிவு செய்யாதவாறு தடை மனு கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, சேட்டு திருவெண்ணைநல்லூர் செயல் அலுவலரிடம் இதுகுறித்து கேட்டபோது நீங்கள் மனையினை அரசிடம் பணம் கட்டி வரன்முறை செய்திருந்தாலும், தனக்கு கொடுக்க வேண்டிய லஞ்சத்தை கொடுத்து விட்டு நீங்கள் இடத்தினை பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக சேட்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார் இந்த புகாரின் அடிப்படையில் இன்று விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை சேட்டுவிடம் கொடுத்தனர்.

அந்த பணத்தை திருவெண்ணைநல்லூர் செயல் அலுவலர் முருகனிடம் வழங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகனை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 304

    0

    0