கள்ளச்சாராயம் குடிச்சவனுக்கு நிதி இருக்கு.. உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு நிதி இல்லையா? நீதிபதி சரமாரி கேள்வி..!

Author: Vignesh
21 ஆகஸ்ட் 2024, 4:01 மணி
Quick Share

மதுரை அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் கிடப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கில் மேல்முறையீடு தாக்கல் செய்த அரசுக்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போன நபர் ஒன்றிற்கு பத்து லட்சம் கொடுத்த அரசு சுவர் இடிந்து விழுந்து இறந்து போன குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் கொடுக்க முடியாமல் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பி அரசின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது சுவர் இடிந்து உயிரிழந்த குழந்தை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியாதா? வெட்கமாக இல்லையா? எவ்வாறு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தீர்கள்? மேல்முறையீடு தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டார்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 168

    0

    0