பிரசாந்த் அந்த படத்தில் நடித்திருந்தால்… அஜித் அடையாளம் தெரியாமல் போயிருப்பார்!

Author:
21 August 2024, 8:59 pm

90ஸ் காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் பிரசாந்த் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து பல வருடம் ஒதுங்கியிருந்தார். திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கி இருக்கிறார்.

நடிகர் பிரசாத். தற்போது விஜய்யுடன் “கோட்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இது தவிர நடிகர் பிரசாந்த் அந்தகன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. பாலிவுட் நடிகர் ஆன ஆயிஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்த “அந்தாதூன்” படத்தின் தமிழ் ரீமேக் தான் “அந்தகன்” திரைப்படம். இந்த கடந்த ஆகஸ்ட் 9ம் ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வசூலில் நல்ல கலெக்சன் ஈட்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் கடந்த 2000-ம் ஆண்டு ராஜூமேனன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்.

இந்த திரைப்படத்தில் அஜித் குமார் நடித்த ரோலில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகர் பிரசாந்த் தான். ஆனால், இந்த படத்தின் கதையை படக்குழு கொண்டுபோய் பிரசாந்திடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் சில காரணத்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக பின்னர் அஜித்திடம் கதை சொல்லி ஒப்பந்தம் பெற்று இருக்கிறார்கள். ஒருவேளை பிரசாந்த் மட்டும் இந்த திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருந்தால் அஜித்தின் கெரியரில் ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம் கைவிட்டுப் போய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…