6 வயது மகனுடன் WRONG SIDEல் பைக்கில் வந்த தம்பதி : எதிரே வந்த பள்ளி பேருந்து.. நொடியில் நடந்த கோரம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2024, 12:52 pm

நத்தம்-மதுரை நான்கு வழிச்சாலையிலுள்ள புதுக்கோட்டை முடக்குச்சாலை என்னும் இடத்தில் நத்தத்தில் இருந்து அழகர்கோவிலுக்கு இயங்கும் தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது முடக்குச்சாலை பகுதியில் தவறான பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்த லிங்கவாடிச் சேர்ந்த முருகன் (வயது 40) மனைவி பஞ்சு (வயது 35), மகன் ஸ்ரீதர்(6) தனியார் பள்ளி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த நத்தம் காவல் துறையினர் 3 பேர்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 328

    0

    0