பணத்தை காற்றில் பறக்கவிட்டு ரீல்ஸ் எடுத்த பிரபல யூடியூபர் : வைரலான வீடியோவால் எழுந்த சிக்கல்!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2024, 4:30 pm

சமீப காலமாக பலர் யூடியூப், இன்ஸ்டா ரீல்ஸ் எடுத்து அந்த வீடியோவை அதிக பார்வைகளுக்காக பல்வேறு யோசனைகளுடன் வீடியோ எடுத்து வருகின்றனர்.

அவர்களில் சிலர் பணம் விநியோகம் செய்தும், பணத்தை காற்றில் பறக்கவிட்டு பதிவு செய்கின்றனர். அவ்வாறு தெலங்கானா மாநிலம் ஐதராபாத் குக்கட்பள்ளியில் ஹர்ஷா என்ற யூடியூபர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பைக்கில் பின்னாள் அமர்ந்து கொண்டு பணத்தை காற்றில் வீசினார்.

ஹர்ஷா கரன்சி நோட்டுகளை காற்றில் வீசும்போது ஹர்ஷா பைக்கில் ஸ்டண்ட் செய்து வீடியோக்களை பதிவேற்றுகிறார். அவர் வீசி எறிந்த பணத்தைப் பிடிக்க மக்கள் போட்டியிட்டு எடுத்து செல்கின்றனர்.

அவ்வாறு ஹர்ஷா என்கிற மகாதேவ் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஹர்ஷா யூடுயூப்பில் “its_me_power” என்ற பெயரில் ஒரு கணக்கை தொடங்கி அதில் பதிவு செய்து வருகிறார்.

இருப்பினும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்