தூய்மை பணியை மேற்கொண்ட போது கடித்த விஷ வண்டு : அடுத்தகனமே ஷாக்.. கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

Author: Vignesh
23 August 2024, 5:32 pm

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் 66 – வது வார்டில் குப்பை லாரியில் பணியாற்றி வரும் அருண்குமார் என்பவர் வழக்கம் போல் இன்று காலையில் கோவை, புலியகுளம் கிட்னி செண்டர் அருகே, மாநகராட்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குப்பை லாரியில் பணிகள் மேற்கொண்டு வந்து உள்ளார்.

இந்த நிலையில் திடீரென அவருக்கு அகிக அளவில் வியர்வை வெளியேறியும்,
முகம், கை, கால்கள் வீங்கிய நிலையில் மயக்கம் வருவதாக தெரிவித்து உள்ளார். இதை அடுத்து உடன் பணியாற்றி வருபவர்கள் விஷ பூச்சி கடித்ததால் இப்படி நடந்து இருக்கும் என்று கருதி உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து வரவழைத்து அருண்குமாரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர்.

தற்பொழுது அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தூய்மை பணியாளர்களின் உயிரோடு விளையாடாமல், பணியின் போது அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி உயிரைப் பாதுகாக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 216

    0

    0