கோவையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? – பதற்றத்தில் மக்கள்..!
Author: Vignesh24 August 2024, 3:30 pm
கோவை, தொண்டாமுத்தூர், கெம்பனூர் அருகே உள்ள அட்டுக்கல் பகுதியில் தோட்டத்து வீட்டில் சுரேஷ் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வெளியே செல்ல சுரேஷ் வீட்டில் இருந்த கதவை திறந்தார்.
அப்பொழுது வெளியில் சிறுத்தை ஒன்று இருந்து உள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் சிறுத்தை என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு இருந்து சிறுத்தை ஓடு வனப் பகுதிக்குள் சென்று மறைந்து உள்ளது. உடனடியாக வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்ட சுரேஷ் குடும்பத்தினருடன் வெளியில் எங்கும் செல்லாமல், இருந்து உள்ளனர்.
மேலும் இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற வனத் துறையினர் பார்க்கும் போது அப்பகுதியில் மர்ம விலங்கு நடமாடிய கால் தடங்கல் பதிவாகி இருந்தது. உடனடியாக அப்பகுதியில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொறுத்து தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர் வனத் துறையினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதி அருகே உள்ள வண்டிக்காரனூர் பகுதியில் ஆடுகளை மர்ம விலங்கு தாக்கியதாக வனத்துறையினர் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய நிலையில், அதில் எந்த காட்சியும் பதிவாகவில்லை என வனத் துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் சில நாட்கள் கழித்து அந்த கிராமத்தினர் வனப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் செல்போன் வீடியோ காட்சிகளை பதிவு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். பின்னர் தற்பொழுது அட்டுக்கல் சுரேஷ் என்பவர் வீட்டின் முன்பு சிறுத்தை இருந்ததை தொடர்ந்து மீண்டும் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள வளர்ப்பு விலங்குகள் மற்றும் பொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன்பு அதனை கூண்டு வைத்து வனத் துறையினர் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் அனுப்ப வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.